இஸ்ரேல் போருக்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவருக்கு ‘கோமா’: விஷம் குடித்ததாக பரபரப்பு

1 month ago 4

தெஹ்ரான்: ஈரான் நாட்டின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காசா, லெபனான், ஈரான், சிரியா மீது இஸ்ரேல் அடுத்தடுத்து கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில் இஸ்ரேலுக்கு பதிலடியாக ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனியின் உத்தரவுப்படி இந்த தாக்குல் நடத்தப்பட்டது. 85 வயதான அவர் தற்போது மிகவும் மோசமான உடல் நிலையில் உள்ளதாகவும், குறிப்பாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான தகவல் ஈரானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடுமையான நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்றும், தனது மகனான மொஜ்தபா கமேனியை வாரிசாக நியமிக்க உள்ளதாகவும் ஈரான்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உடல்நலம் குறித்து இஸ்ரேல் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ‘ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, விஷம் குடித்ததாக தெரிகிறது. அதனால் அவர் வென்டிலேட்டர் ஆதரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கோமா நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இஸ்ரேல் போருக்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவருக்கு ‘கோமா’: விஷம் குடித்ததாக பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article