தெஹ்ரான்,
மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே 75 ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலுடன் ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகிறது. அவ்வப்போது இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்துவதும், இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுப்பதும் என பல ஆண்டுகளாகவே உரசல் இருந்து வருகிறது.
இந்தநிலையில்தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியது. ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை இஸ்ரேலை நோக்கி வீசியதுடன், தரைவழியாக இஸ்ரேலுக்கு ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 250 பேரை பணய கைதிகளாக பிடித்து காசா பகுதிக்கு ஹமாஸ் அமைப்பு பிடித்து சென்றது. இதனை எதிபார்க்காத இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை ஒழித்து கட்டுவோம் என போர் தொடுத்தது.
தரைவழியாகவும் இஸ்ரேல் படைகள் காசாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின. இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர் மேலும் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 250 பேரை பணய கைதிகளாக பிடித்து காசா பகுதிக்கு ஹமாஸ் அமைப்பு பிடித்து சென்றது. இதனை எதிபார்க்காத இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை ஒழித்து கட்டுவோம் என போர் தொடுத்தது. தரைவழியாகவும் இஸ்ரேல் படைகள் காசாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின. இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கி இன்றுடன் ஓரு ஆண்டாகிறது. ஆனால் தற்போது வரை அங்கு பதற்றம் தணிந்தபாடில்லை. மாறாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தற்போது ஈரான் - இஸ்ரேல் மோதலாக வெடித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து ஹிஸ்புல்லா தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் உளவு படை கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்தது. இதற்கு பழிவாங்கும் விதமாக இஸ்ரேல், ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேலின் அயன் டோர்ம் இடைமறித்தது அழித்தது. இருந்தாலும் பல ஏவுகணைகள் இலக்கை தாக்கின.
இதனால், ஈரான் மீதும் கடும் கோபத்தில் உள்ளது இஸ்ரேல். இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான், ஈரானில் இரவில் செல்லக் கூடிய அனைத்து விமானங்களும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியில் இருந்து திங்கள் கிழமை காலை 6 மணி வரை அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஈரான் விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரானை தொடர்ந்து லெபனானும் பெய்ரூட் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் அபாயம் அதிகரித்து இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை ஈரானும், லெபனானும் எடுத்துள்ளன.