
டெல் அவிவ்,
இஸ்ரேல் நாட்டின் வடக்கே ஹைபா நகரில் உள்ள பஸ் மற்றும் ரெயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென மக்கள் மீது பாய்ந்து கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி உள்ளார்.
இந்த சம்பவத்தில், 70 வயது முதியவர் ஒருவர் பலியானார். 30 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண், 15 வயது சிறுவன் ஆகியோர் தாக்குதலில் படுகாயமடைந்து உள்ளனர்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, கடந்த மே மாதம் வெளிநாட்டில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த மர்ம நபர் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளார். இந்த தாக்குதல் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர். இதில் கொல்லப்பட்ட நபர், பாலஸ்தீனியர் என அல் ஜசீரா செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. 15 வயது சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளான்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே முதல் கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள சூழலில், 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படாமல் உள்ளது. அதனை நீட்டிப்பதற்கு ஒப்புதல் அளிக்காமல் இஸ்ரேல் மறுத்து உள்ளது.
இதேபோன்று, மனிதநேய உதவிக்கான நிவாரண பொருட்கள் காசாவில் நுழைய முடியாத வகையில், இஸ்ரேல் முடக்கி வைத்து உள்ளது. இந்த சூழலில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.