இஸ்ரேலின் மொசாட்டிற்கு உளவு பார்த்ததாக கூறி இளைஞருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய ஈரான்

6 hours ago 2

 

தெஹ்ரான்,

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல், இஸ்ரேலுக்கு எதிரான ஈரானும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதனிடையே, கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் ஈரான் புரட்சிப்படையின் முக்கிய தளபதி சயது ஹடாய் தெஹ்ரானில் சுட்டுக்கொல்லப்பட்டார். பைக்கில் வந்த 2 பேர் சயதை சுட்டுக்கொன்று விட்டு தப்பிச்சென்றனர்.

இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் இஸ்ரேலால் நடத்தப்பட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டியது. இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேலின் உளவு அமைப்பான மோசாட்டிற்கு வேலை பார்த்ததாக ஈரானை சேர்ந்த மோசின் லங்கர்னிஷ்னி என்ற இளைஞரை ஈரான் அரசு கைது செய்தது. 2023 ஜுலை மாதம் லங்கர்னிஷ்னி கைது செய்யப்பட்டார்.

மோசின் 2020ம் ஆண்டு முதல் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டிற்கு உளவு தகவல்களை அனுப்பியதாக ஈரான் குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், உளவு வழக்கில் கைது செய்யப்பட்ட மோசின் லங்கர்னிஷ்னிக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது.   

Read Entire Article