இஸ்மாத் ஆலம் சதம்... ஜிம்பாப்வேவுக்கு 278 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

6 months ago 16

புலவாயோ,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், 2-வது டெஸ்ட் புலவாயோவில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது.

இதன் முதல் இன்னிங்சில் முறையே ஆப்கானிஸ்தான்157 ரன்களும், ஜிம்பாப்வே 243 ரன்களும் அடித்தன. பின்னர் 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் ஆரம்ப கட்டத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்து திண்டாடியது.

இந்த இக்கட்டான சூழலில் ரஹ்மத் ஷா சிறப்பாக விளையாடி சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். நிலைத்து நின்று ஆடி 3-வது சதத்தை எட்டிய ரஹ்மத் ஷா 139 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் நேற்றைய 3ம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 291 ரன்கள் எடுத்திருந்தது. இஸ்மாத் ஆலம் 64 ரன்களுடனும், ரஷீத் கான் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் தனது 2வது இன்னிங்சில் 363 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் இஸ்மாத் ஆலம் 101 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 6 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு 278 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கி ஜிம்பாப்வே ஆடி வருகிறது.

Read Entire Article