இழப்பீட்டு தொகை வழங்காமல் இழுத்தடிப்பு பழநியில் பஸ் ஜப்தி

3 hours ago 1

பழநி : பழநியில் இழப்பீட்டு தொகை தராததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.பழநி புறநகர், சிவகிரிபட்டியை சேர்ந்தவர் கருப்புச்சாமி (24). கொத்தனார். இவர் கடந்த 2018ம் ஆண்டு சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பஸ் மோதியதில் படுகாயமடைந்த கருப்புச்சாமி உயிரிழந்தார். இதுதொடர்பாக இழப்பீடு கேட்டு கருப்புச்சாமியின் தாய் பாக்கியம் பழநி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் போக்குவரத்து கழகம் சார்பில் பாக்கியத்திற்கு ரூ.19 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், இதுவரை இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. தற்போது வட்டியுடன் ரூ.29 லட்சம் வழங்க வேண்டி உள்ளது. இதை தொடர்ந்து பாக்கியம் தரப்பின் சார்பில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி மலர்விழி அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று பழநி பஸ் நிலையத்தில் நின்றிருந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.

The post இழப்பீட்டு தொகை வழங்காமல் இழுத்தடிப்பு பழநியில் பஸ் ஜப்தி appeared first on Dinakaran.

Read Entire Article