இழந்த 10% வாக்குகளை மீட்க வேண்டும்: அதிமுக ஐடி பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

2 hours ago 3

சென்னை: 10% வாக்குகளை இழந்துவிட்டோம், அதனை மீட்கும் வகையில் செயல்பட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டை தலைமை கழகத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது ; இந்திய அளவில் முதலில் தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கிய கட்சி அதிமுக. செய்தித்தாளில் தான் செய்திகளை அறிந்து கொண்டிருந்த காலம் மாறி வலைத்தளங்கள் மூலம் செய்திகள் ஒரு நொடியில் சென்று சேர்கிறது.

ஊடகம்,பத்திரிகைகளும் வேண்டுமென்றே பொய் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அந்த பொய் செய்திகளைத் தகவல் தொழில்நுட்ப அணி தான் முறியடிக்க வேண்டும். கடந்த காலங்களில் அ.தி.மு.க. தொடர்ந்து தக்க வைத்திருந்த 40 சதவீத வாக்கு வங்கியை சுட்டிக்காட்டினார்.ஆனால் தற்போது 10 சதவீத வாக்குகளை அ.தி.மு.க. இழந்து இருக்கிறது. இழந்த வாக்குகளை நாம் மீட்டெடுக்க வேண்டும். அதற்கு ஏற்ப பணியாற்றுங்கள். குறிப்பாக இளைஞர்கள் வாக்குகள் அதிகம் உள்ளன. அவர்கள் மத்தியிலும், முதல் தலைமுறை வாக்காளர்களிடமும் கட்சியின் செயல்பாடுகளை எடுத்து சொல்லுங்கள்.

முகநூல், எக்ஸ்தளம், இன்ஸ்டாகிராம் வலைத்தளங்களில் இளைஞர்களின் விருப்பம் அறிந்து அதற்கு ஏற்றவாறு கருத்துக்களை பதிவிட வேண்டும். சமூக வலைத்தளத்தில் உங்கள் பதிவுகள் கண்ணியத்துடன் இருக்க வேண்டும். தரம் தாழ்ந்த விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும். நாங்கள் உங்களுக்குப் பக்க பலமாக இருக்கிறோம். மாநில நிர்வாகிகள் அளிக்கும் பணிகளை செவ்வனே செய்ய வேண்டும். நம்முடைய இலக்கு 2026. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய உங்களது பங்கு மிக முக்கியம் என்று கூறினார்.

The post இழந்த 10% வாக்குகளை மீட்க வேண்டும்: அதிமுக ஐடி பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article