இளைஞர் கொலை: கூலிப்படையினர் 8 பேர் கைது

3 months ago 16

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே சூனியம் வைத்ததாக கூறி, கூலிப்படை வைத்து இளைஞர் கொலை செய்யப்பட்டார். ஒட்டந்தாங்களைச் சேர்ந்த விஜயன் என்பவருக்கும் கொலை செய்யப்பட்ட முருகனுக்கும் நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. விஜயனின் 9 வயது மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தனது மகன் உயிரிழந்ததால், தனது குடும்பத்துக்கு முருகன் சூனியம் வைத்துவிட்டதாக விஜயன் கருதி வந்துள்ளார். தனது மகன் இறப்புக்கு பழிவாங்க முருகனை கூலிப்படை உதவியுடன் தீர்த்துக் கட்ட விஜயன் திட்டம் தீட்டியுள்ளார். தனது கணவர் முருகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என அவரது மனைவி பாக்கியலட்சுமி போலீசில் புகார் தெரிவித்திருந்தார். புகாரின்பேரில் விசாரணை நடத்திய உத்திரமேரூர் போலீஸ் முருகன் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தது. முருகன் கொலை தொடர்பாக செய்யாறு அடுத்த பெரியவேலியநல்லூரைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post இளைஞர் கொலை: கூலிப்படையினர் 8 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article