இளம்பெண் மர்ம சாவு: தூக்கில் சடலம் தொங்கியது

12 hours ago 1

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் துராப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா (30), கணவன் இறந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அனிதாவின் மாமியார் அம்சா திடீரென வீட்டுக்கு சென்றபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்ற அம்சா மின்விசிறியில் அனிதா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அனிதாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனிதா உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் ‘‘அனிதா வீடு திறந்த நிலையிலும் பொருட்கள் ஆங்காங்கே உடைக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இது கொலையாக இருக்கலாம்’’ என்றனர். இதைக்கேட்ட போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளம்பெண் மர்ம சாவு: தூக்கில் சடலம் தொங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article