‘புஷ்பா படம்’ பார்த்துவிட்டு அரசு பஸ்ஸை கடத்திய வாலிபர் கைது: சாலையோரம் பார்க்கிங் செய்து தூங்கிய போது சிக்கினார்

11 hours ago 2

திருமலை: அனகாப்பள்ளி மாவட்டத்தில் ‘புஷ்பா படம்’ பார்த்துவிட்டு அரசு பஸ்ஸை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளி மாவட்டம், நர்சிப்பட்டினத்தில் உள்ள ஆந்திர மாநில ஆர்டிசி பஸ் ஸ்டாண்டில் கடந்த 22ம் தேதி இரவு ஒரு அரசு பஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 23ம் தேதி அதிகாலை வழக்கு போல் பணிக்கு வந்த பஸ் டிரைவர் பஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உஷார்ப்படுத்தினர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், நேற்று முன்தினம் சீதாராமராஜ் மாவட்டம், சிந்தலூர் அருகே காணாமல் போன அரசு பஸ் சாலையோரம் இருப்பதை அறிந்த போலீசார் உடனடியாக நர்சிபட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, போலீசார் பஸ்ஸின் உள்ளே சென்று பார்த்தபோது, அதில் ஒரு வாலிபர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். அவரிடம் மேற்ெகாண்ட விசாரணையில், அவர் தமிழகத்தை சேர்ந்த சாதிக் என்பது தெரியவந்தது.

இவர் விசாகப்பட்டினத்தில் இருந்து பெங்களூரு இடையே தனியார் பஸ் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். அவரை தனியார் பஸ் நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியதால் வேலை இல்லாமல் திருடி வந்துள்ளார். சாதிக் கடந்த 22ம் தேதி இரவு நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா-2 படம் பார்த்து விட்டு நர்சிப்பட்டினத்தில் உள்ள ஆந்திர மாநில ஆர்டிசி பஸ் ஸ்டாண்டிற்கு வந்துள்ளார். அங்கு சாவியுடன் இருந்த பஸ்ஸை யாருக்கும்தெரியால் கடத்தி சென்றார். சிந்தப்பள்ளி அருகே சென்ற போது தூக்கம் வந்ததால் பஸ் நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சித்திக்கை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ‘புஷ்பா படம்’ பார்த்துவிட்டு அரசு பஸ்ஸை கடத்திய வாலிபர் கைது: சாலையோரம் பார்க்கிங் செய்து தூங்கிய போது சிக்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article