
சென்னை,
திருநெல்வேலியை சேர்ந்தவர் ஜோராம் வயது 20 இவர் படப்பை அடுத்து மாடம்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி சென்னையில் உள்ள கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் குடியிருந்து வந்த வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டின் குளியலறையில் இளம்பெண் ஒருவர் குளித்துக்கொண்டிருந்தார். இதனை கவனித்த ஜோராமிற்கு விபரீத ஆசை ஏற்பட்டது. ஜன்னல் வழியாக இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தார்.
அந்த நேரத்தில் கல்லூரி மாணவருக்கு அழைப்பு வந்ததால் செல்போன் ரிங்டோன் அதிக சத்தத்துடன் ஒலித்தது. சந்தேகம் அடைந்த இளம்பெண் பார்த்த போது ஜன்னல் வழியாக குளிப்பதை பக்கத்து வீட்டு வாலிபர் வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். சத்தம்கேட்டு வந்த அக்கப்பக்கத்தினர் செல்போனில் வீடியோ எடுத்த கல்லூரி மாணவர் ஜோரோமை மடக்கிபிடித்து மணிமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் மாணவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.