இளம் வீரர்களுக்கு சென்னை தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும்; ஆஸி. முன்னாள் கேப்டன்

3 weeks ago 5

சென்னை,

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 2 வெற்றி, 8 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10வது இடத்தில் உள்ளது.

புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.

இந்நிலையில், இளம் வீரர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

தங்கள் அணி தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது சென்னை சூப்பர் கிங்சிற்கு நன்றாக தெரியும். தற்போது உள்ள வீரர்கள் மற்றும் புதிதாக வந்துள்ள இளம் வீரர்கள் குறித்து எவ்வளவு தகவல்கள் பெற முடியுமோ அந்த அணி அதை பெற வேண்டும். டெவால்ட் பிரேவிஸ் அணியில் இணைந்துள்ளார். ஷிவம் துபேவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பார்க்க வேண்டும். தற்போதையை சூழ்நிலையில் கர்வத்துடன் முன்னேறி சென்று பிற அணியின் பிளே ஆப் கனவுகளுக்கு இடையூறு அளிக்க வேண்டும். இளம் வீரர்களுக்கு சென்னை தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும். அவர்களை நம்ப வேண்டும்.' என்றார்.

Read Entire Article