இளம் நடிகைகளுக்கு ஷ்ரத்தா கபூர் அறிவுரை

4 months ago 17

சென்னை,

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான 'சாஹோ' படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷ்ரத்தா கபூர். இந்தியில் 'ஆஷிக் 2, ஹைதர், ராக் ஆன்-2, ஓகே ஜானு' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இவர் கடைசியாக 'ஸ்ட்ரீ 2' படத்தில் நடித்திருந்தார். இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ரூ.700 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்நிலையில், சினிமாவில் நுழைந்திருக்கும் புதுமுக நடிகைகளுக்கும், இளம் நடிகைகளுக்கும் ஷ்ரத்தா கபூர் அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'வெறும் கவர்ச்சியால் மட்டுமே நல்ல நடிகை என்ற பெயரை வாங்கி விட முடியாது. நீங்கள் நல்ல நடிகையாக விரும்பினால், 90 சதவிகிதம் கடின உழைப்பை கொடுக்க வேண்டும், மற்ற 10 சதவிகிதம்தான் கவர்ச்சி' என்றார்.

Read Entire Article