இல்லறம் நல்லறமாக!

3 months ago 19

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சண்டை சச்சரவுகள் வருவது சகஜமே. அதே வேகத்தில் விவாகரத்தும் சகஜம் என பெருகி அப்படி சண்டை சச்சரவுகள் வருவதற்கு என்ன காரணம்? எங்கே தவறு நடக்கிறது? அது எப்படி திருத்திக் கொள்ள வேண்டும்? சண்டைகள் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ முடியாதா என்ற பல கேள்விகள் உங்கள் மனதில் பெறலாம். அதுவும் நியாயம் தான். இக்காலகட்டத்தில் கணவன் மனைவி சண்டை என்பது வெறும் அற்ப விஷயங்களுக்குக் கூட நடக்கிறது. இதற்கெல்லாம் சண்டை போடுகிறீர்கள் என்று நண்பர்கள் கிண்டல் செய்யும் அளவிற்கு சில தம்பதிகள் நடந்து கொள்வதையும் நாம் பார்க்கிறோம். கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க இதோஆலோசனைகள்.

1. கணவனும் மனைவியும் தவறு செய்வது இயல்பு. யாரும் தவறு செய்வதிலிருந்து தப்ப முடியாது. ஆனால், தவறு செய்து விட்டு தவறு செய்ததை ஒப்புக் கொள்ளாமல், சண்டையிடக்கூடாது. தவறை ஒப்புக் கொள்ள வேண்டும்.
2. இருவரும் தப்பு செய்ததாக உணர்ந்தால் சண்டை சச்சரவுகள் வராது. ஆனால் எல்லா தவறுகளுக்கும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் சிலரைப் போலல்லாமல், மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
3. கணவன் மனைவிக்கு தனிப்பட்ட சுதந்திரம் அவசியம். யாருக்கும் தனிப்பட்ட உரிமை இல்லை. ஆனால் அதற்கும் வரம்புகள் உண்டு. தனிப்பட்ட சுதந்திரத்தில் எல்லை மீறாமல் இருக்க வேண்டும். உங்கள் துணைக்கு தனிப்பட்ட சுதந்திரம் கொடுங்கள். அப்படி கொடுக்காவிட்டால் இருவருக்கும் இடையே தகராறும், மனக்கசப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
4. எப்போதுமே மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டாம். அதாவது அதீத சிந்தனை (Over Thinking) உங்கள் துணையைப் பற்றிய விஷயங்களை ஆழமாக சிந்திக்காமல் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் ஆழமாகப் பார்த்தால், ஒரு பெரிய பிரச்னையாகத்தான் தெரியும். அப்போது இருவருக்குள்ளும் மகிழ்ச்சிக்கு இடம் கிடைக்காது. எந்த தவறும் செய்யாவிட்டாலும் அது பிழையாகவே பார்க்கப்படும். அதனால் எதையும் போகிற போக்கில் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
5. இருவரும் சேர்ந்து வீட்டு வேலை செய்யும் போது கஷ்டங்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார்கள். நான் சம்பாதிக்கும் வேலையை மட்டும் செய்வேன். நீ வீட்டு வேலைகளை பார்த்துக் கொள் எனக் கூறுவதால்தான் பொதுவான ஈகோ தகராறுகள் அதிகரித்து வருகின்றன. வீட்டு வேலைகளை இருவரும் சேர்ந்து செய்யும் போது பந்தம் வலுப்பெறுகிறது.
6. கணவன் மனைவிக்கு திருமணம் ஆன பிறகு, மனைவி கணவரின் பெருமையையும், கணவன் மனைவியின் பெருமையையும் குறிப்பாக அவரவர் வீட்டார் முன் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காதீர்கள். உன்னை விட எனக்கு அதிகம் தெரியும், உன்னை விட எனக்கு புத்திசாலித்தனம் அதிகம், உன் சம்பளத்தை விட என் மாத சம்பளம் அதிகம். உன் பேச்சை கேட்கவே மாட்டேன் போன்ற விஷயங்கள் அறவே ஒதுக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் இருவரும் உங்கள் ஈகோவை குறைக்கும்போது தான் உங்களுக்கிடையில் காதல் வளரும்.ஒரே ஒரு மாதம் மட்டும் இவைகளை கடைப்பிடித்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசுகிறதா இல்லையா என்று. நீங்களே உணர்வீர்கள். கணவன் மனைவியிடையே நிச்சயமாக இந்த6 யோசனைகள் மகிழ்ச்சியை எற்படுத்தும்.
– கவிதாபாலாஜி கணேஷ்

 

The post இல்லறம் நல்லறமாக! appeared first on Dinakaran.

Read Entire Article