இலுப்பூர், பிப் 18: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே மலைக்குடிப்பட்டியில் உள்ள ஆர்ஆர்சிசி கிரிக்கெட் அணி சார்பில் கிரிக்கெட் போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது.
மலைக்குடிப்பட்டி பள்ளி அருகே உள்ள திடலில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மணப்பாறை, கொடும்பாளூர் விராலிமலை,மலைக்குடிப்பட்டி மற்றும் இலுப்பூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து 20 அணிகள் பற்கேற்று விளையாடின. இரண்டு நாட்கள் பல சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல்பரிசு விராலிமலை அணிக்கும், இரண்டாம் பரிசு மலைக்குடிப்பட்டி அணிக்கும், மூன்றாம் பரிசு மணப்பாறை உசிலம்பட்டி அணிக்கும் கோப்பை மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது. கிரிக்கெட் போட்டியை சுற்றுப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கண்டு களித்தனர்.
The post இலுப்பூர் அருகே கிரிக்கெட் போட்டி appeared first on Dinakaran.