இலுப்பூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

3 hours ago 3

 

விராலிமலை, ஜன.12: இலுப்பூர் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்து அவரிடம் விற்பனைக்கு இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதிகளில் உள்ள ஒரு சில பெட்டிக்கடைகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சிலர் பதுக்கி வைத்து அதிக விலைக்கு வாடிக்கையாளருக்கு விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, இலுப்பூர் அடுத்துள்ள பாக்குடி பெட்டி கடையில் குட்கா பொருள் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட இருந்திராப்பட்டியைச் சேர்ந்த தங்கராஜை(53)கைது செய்த போலீசார் அவரிடம் விற்பனைக்காக இருந்த குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.

The post இலுப்பூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article