இலாடபுரம் அரசு பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம்

2 months ago 11

 

பெரம்பலூர்,நவ.16: இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் இந்தியத் திருநாட்டின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி குழைந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு குழந்தைகளை அதிகம் பிடிக்கும் என்பதால் அவரது பிறந்த நாளான நவம்பர் 15ம் தேதியை குழந்தைகள் தினமாக கொண்டாட இந்திய அரசு அறிவித்தது.

இதைமுன்னிட்டு நேற்று 15ம்தேதி நேரு பிறந்த நாளில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப் பட்டது. இந்த விழாவிற்கு பள்ளியின் மாணவ மாணவிகள் வண்ண வண்ண உடைகளில் வகுப்புகளுக்கு வந்திருந்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் மாயக் கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் செல்வராணி, சின்னசாமி பாலச் சந்திரன், சிலம்பரசி அருணா, பள்ளி மேலாண் மைக்குழு தலைவர் தலைவர் இந்திராணி ஆகியோர் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். குழந்தைகள் தின உறுதி மொழி எடுக்கப்பட்டது.

The post இலாடபுரம் அரசு பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article