இலவச பஸ்சில் பயணம் செய்த பெண்ணுக்கு அபராதம் விதித்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம்

2 months ago 16

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள தெற்கு பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசின் இலவச பஸ்சில் பல்லடம் சென்றுள்ளார். அப்போது அவர் இலவச டிக்கெட்டை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பஸ் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் ஆய்வு செய்தபோது அந்தப் பெண்ணிடம் இலவச டிக்கெட் இல்லாததால் ரூ. 200 அபராதம் விதித்துள்ளார். அந்தப் பெண்ணிடம் பணம் இல்லாததால் பஸ்சின் நடத்துனருக்கு ஜிபே மூலம் பணம் செலுத்தியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து இந்த சம்பவத்தை விசாரித்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அபராதம் விதித்ததற்கு ரசீது வழங்கவில்லை. என அந்தப் பெண் கூறியதால் டிக்கெட் பரிசோதகர் மீது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article