இலங்கையில் மோசமான வானிலை.. திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானம்

6 months ago 19

திருவனந்தபுரம்:

துருக்கியில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கி துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 10 விமான பணியாளர்கள் மற்றும் 289 பயணிகள் பயணம் செய்தனர். இன்று அதிகாலையில் விமானம், கொழும்புவை நெருங்கியபோது அங்கு மோசமான வானிலை நிலவியது. விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டதால்  இந்தியாவின் திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டது.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கிடைத்ததும் காலை 6.51 மணிக்கு விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர். கொழும்பில் வானிலை சீரடைந்ததும் விமானம் அங்கு புறப்பட்டுச் செல்லும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article