இலங்கை சிறைகளில் தவிக்கும் மீனவர்களை சந்திக்க 5 பேர் கொண்ட குழு இன்று பயணம்

1 day ago 3

ராமேசுவரம்,

ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும் படகுகளுடன் சிறைபிடிக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்றன. சிறையில் அடைக்கப்படும் மீனவர்கள் அந்நாட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்படாமல், பல லட்சம் வரை அபராதம் விதித்து மீண்டும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

எனவே பல மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர். அவர்களை சந்திப்பதற்காக ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் இலங்கை செல்ல உள்ளனர். அதற்காக மண்டபத்தில் இருந்து நேற்று இரவு ரெயிலில் புறப்பட்டனர். இந்த 5 மீனவர்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணி அளவில் திருச்சியில் இருந்து கொழும்புவுக்கு விமானத்தில் செல்கின்றனர்.

பறிமுதல் செய்த படகுகளை பார்வையிட்டு, மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை மீன்வளத்துறை மந்திரியிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும், 6 நாட்கள் இலங்கையிலேயே தங்கி இருந்து ஏப்ரல் 1-ந்தேதி தமிழகம் வர திட்டமிட்டு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article