இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20: வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு

3 months ago 22

தம்புல்லா,

இலங்கை சென்றுள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் இன்று நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரொவ்மென் பவேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இரு அணிகளிலும் சிறந்த வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 15 சர்வதேச 20 ஓவர் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இலங்கை 8 ஆட்டத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 7 ஆட்டத்திலும் வென்று இருக்கின்றன. 

Read Entire Article