இலகுரக ஓட்டுநர் லைசென்ஸ் இருந்தால் 7,500 கிலோ வாகனம் ஓட்ட அனுமதி

1 week ago 3

புதுடெல்லி: இலகுரக வாகன ஓட்டுநர் லைசென்ஸ் இருந்தால் 7500 கிலோ எடையுள்ள வாகனங்களை ஓட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. நமது நாட்டில் விபத்து ஏற்பட்டால் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் காப்பீடு உரிமை பெறுவதில் சிக்கல் உள்ளது. இந்த சிக்கலை தீர்த்து வைக்க கோரிய வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ராய், நரசிம்ஹா, பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில்,’ வணிக வாகன ஓட்டுநர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்து இருப்பவர்கள் 7500 கிலோ எடை கொண்ட போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம்’ என்று உத்தரவிட்டனர்.

The post இலகுரக ஓட்டுநர் லைசென்ஸ் இருந்தால் 7,500 கிலோ வாகனம் ஓட்ட அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article