இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி 11 பெண்கள் படுகாயம்

3 months ago 22

பண்ருட்டி, அக். 4: இறந்தவரின் சடலம் ைவக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி 11 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்த லோகநாதன்(65) என்பவர் நேற்று காலை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து இவரது உடல் குளிர்சாதன பெட்டியில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது. குளிர்சாதன ெபட்டி அருகில் பெண்கள் அமர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது குளிர்சாதன பெட்டியை தொட்டபோது, அவர்கள் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது.
இதில் மேல் கவரப்பட்டை சேர்ந்த பிரபா(48), உமையாள்(50), சுகன்யா, ரக்‌ஷனா(18), அன்பரசி(38), வேம்பு(38), வேளாங்கண்ணி(40) உள்ளிட்ட 11 பெண்கள் படுகாயம் அடைந்து மயங்கினர். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் மின்சாரத்தை துண்டித்து, அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவலின் பேரில், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி 11 பெண்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article