இறகு பந்து ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 57 வீரர், வீராங்கனைகள் மாநில அளவில் விளையாட பயணம்: பெரம்பலூர் கலெக்டர் வழி அனுப்பி வைப்பு

3 months ago 21

பெரம்பலூர், அக். 4: பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்துள்ள முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளை சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேற்று (3ம்தேதி) பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

முதலமைச்சர் கோப்பைக்கான பெரம்பலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த செப்-10 ம்தேதி தொடங்கி 23ம் தேதி வரை 05 வகையான பிரிவுகளில் 27 வகையான விளையாட்டுப் போட்டிளாக நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில், பள்ளி மாணவ மாணவிகள் 5,905 நபர்களும், கல்லூரி மாணவ,மாணவிகள் 3,749 நபர்களும், 240 மாற்றுத் திறனாளிகளும், 531 அரசு பணியாளர்களும், 1,571 பொதுமக்களும் என மொத்தம் 11,996 நபர்கள் பங்கேற்றனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுக்கான காசோலைகளையும், பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கியுள்ளார்.

இந்த வீரர் வீராங்கனைகளை சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக மாவட்டக் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து அரசு பஸ்களில் புறப்பட்டுச் செல்லும் முன்பாக மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இதன்படி நேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கால் பந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வலை கோல்பந்து,தனிநபர் இறகு பந்து ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 57 வீரர் வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்காக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார் பாக ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த அரசுப்பேருந்தில் சென்னை செல்கின்றனர். இவர்களுடன் கலந்துரையாடிய மாவட்டக் கலெக்டர் மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்று பெரம்ப லூர் மாவட்டத்திற்கு பெருமைசேர்க்க வேண்டும் என ஊக்கப்படுத்தினார்.

இந்த நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தம், மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, டேக்வோண்டோ பயிற்றுநர் பரணிதேவி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post இறகு பந்து ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 57 வீரர், வீராங்கனைகள் மாநில அளவில் விளையாட பயணம்: பெரம்பலூர் கலெக்டர் வழி அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article