மூணாறு, மே 23: மூணாறு அருகே இரைச்சல் பாறை பகுதியில் வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த 17 பேர் கொண்ட குழு டெம்போ ட்ராவலரில் பிரபல சுற்றுலா தலமான மூணாறுக்கு சுற்றுலாவிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இவர்கள் பயணம் செய்த வேன் பூப்பாறை அருகே உள்ள இரைச்சல் பாறை பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதிகாலை 2 மணி அளவில் காட்டுப்பாட்டை வாகனம் சாலை அருகே உள்ள பாதுகாப்பு சுவரை இடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு விபத்தில் சீக்கியவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post இரைச்சல் பாறை பகுதியில் வேன் விபத்தில் 10 பேர் காயம் appeared first on Dinakaran.