இருளில் மூழ்கும் தொண்டி செக்போஸ்ட்

1 month ago 9

 

தொண்டி, டிச.8:தொண்டி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள செக்போஸ்ட்டில் உள்ள ஹைமாஸ் விளக்கு எரியாததால், அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பட்டுக்கோட்டை ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலை, மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் மும்முனை சந்திப்பான செக்போஸ்ட் அருகில் நீண்ட நாளாக பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து ஹைமாஸ் விளக்கு வைக்கப்பட்டது. சில மாதங்களாக இதில் சில லைட் எரியாததால் இப்பகுதி இருளாக உள்ளது. மும்முனை சந்திப்பு என்பதால் பகல் நேரங்களில் கூட அடிக்கடி விபத்து நடக்கிறது. அதனால் பெரிய விபத்து நடக்கும் முன்பு சரி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வாகன ஒட்டிகள் கூறியது, ரவுண்டானா இல்லாமல் எதிரே வரும் வாகனம் தெரியாமல் பகல் நேரங்களில் அடிக்கடி விபத்து நடக்கிறது. தற்போது இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாமல் இருளாக உள்ளது. இப்பகுதியை கடக்கவே அம்சமாக உள்ளது என்றனர்.

The post இருளில் மூழ்கும் தொண்டி செக்போஸ்ட் appeared first on Dinakaran.

Read Entire Article