இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

2 hours ago 2

பியூனஸ் அயர்ஸ்: பிரதமர் மோடி ஐந்து நாடுகள் கொண்ட நீண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக டிரினிடாட் அண்ட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு அவர் செல்கிறார். தனது பயணத்தின் முதல் கட்டமாக டிரினிடாட் அண்ட் டொபாகோ பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, இன்று காலை அர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த இரண்டு நாள் பயணத்தின் முக்கிய நோக்கம், இந்தியா – அர்ஜென்டினா இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாகும். இதுகுறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதள தளத்தில், ‘அர்ஜென்டினாவுடனான உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் இந்த இருதரப்புப் பயணமாக பியூனஸ் அயர்ஸ் வந்துள்ளேன். அதிபர் ஜேவியர் மிலேயைச் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பயணத்தைத் தொடர்ந்து, பிரேசில் நாட்டில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, தனது பயணத்தின் இறுதிக் கட்டமாக நமீபியா செல்ல உள்ளார் என்று வெளியுறவு துறை கூறியுள்ளது

திருக்குறள் கூறிய மோடி;
பிரதமர் மோடி தனது உரையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவரையும், திருக்குறளையும் நினைவு கூர்ந்தார். மேலும் தமிழின் தொன்மையை எடுத்து கூறினார். தொடர்ந்து, ‘படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்; உடையான் அரசருள் ஏறு’ என்ற திருக்குறளை கூறி, அதற்கான விளக்கத்தை எடுத்துரைத்தார்.

The post இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Read Entire Article