''இரு நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார்'' - அப்பல்லோ மருத்துவமனை

6 months ago 41
இதயத்தில் இருந்து வெளியே செல்லும் ரத்தக்குழாயில் ஏற்பட்ட வீக்கத்திற்கான சிகிச்சையை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. திடீர் உடல் நலக்குறைவால் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் திங்கட்கிழமையன்று ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ரத்த நாள வீக்கத்திற்காக TRANSCATHETER முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், STENT பொருத்தி திட்டமிட்டபடி சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளது. 
Read Entire Article