இராமசாமி கோயில் ராமநவமி பெருவிழா கொடியேற்றம்

3 days ago 3

கும்பகோணம், மார்ச்30: கும்பகோணத்தில் தென்னக அயோத்தி என போற்றப்படும் இராமசாமி திருக்கோயிலில் இராமநவமி பெருவிழா முன்னிட்டு நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சாவூரை ஆண்ட ரெகுநாத நாயக்க மன்னரால் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட பழமையான திருக்கோயில் தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசுவாமி திருக்கோயில். இங்கு இராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் அருள்பாலிக்கிறார். இராமபிரான் சீதா தேவியுடன் அமர்ந்திருக்க, சத்ருக்ணன் சாமரம் வீச, லட்சுமணன் தன்னுடைய மற்றும் அண்ணன் ராமனுடைய வில்லினையும் ஏந்தியிருக்க, பரதன் குடை சமர்ப்பிக்க, வேறு எங்கும் காண முடியாத வகையில் அனுமன் ஒரு கையில் வீணையும், மறு கையில் இராமாயண சுவடியும் ஏந்தியபடி காட்சியளிக்கிறார்.

இத்தகைய சிறப்புபெற்ற தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இராமநவமி பெருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா நேற்று உற்சவர் இராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் சமேதராய் தங்க கொடி மரம் அருகே எழுந்தருள பட்டாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய, நாதஸ்வர மேளதாள மங்கள வாத்திய இசை முழங்க, கருடாழ்வார் உருவம் பொறிக்கபட்ட கொடி தங்க கொடிமரத்தில் ஏற்றி, கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து நாள்தோறும் அனுமந்த வாகனம், இந்திர விமானம், சூரியபிர பை, சேஷவாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

விழாவில் 4ம் நாள் நிகழ்ச்சியாக ஏப்ரல் 1ம் தேதி செவ்வாய்கிழமை ஓலைச்சப்பரத்தில் தங்க கருடசேவையும், தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான 9ம் நாள் நிகழ்ச்சியாக 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இராமநவமியை முன்னிட்டுராம பிரான், சீதாதேவி, லட்சும ணர், அனுமன் ஆகியோருடன் தேரில்எழு ந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது. 10ம் நாள் 7ம் தேதி திருமஞ்சனம், புஷ்பயாகமும், தொடர்ந்து ராஜ உபசார திருமஞ்சனத்துடன் இவ்வாண்டிற்கான ராமநவமி பெருவிழா நிறைவு பெறுகிறது.

The post இராமசாமி கோயில் ராமநவமி பெருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article