இரவு வாகன சோதனையின்போது தாக்கிவிட்டு தப்பிய வழிப்பறி கொள்ளையரை விரட்டி பிடித்த போலீஸார்: காவல் ஆணையர் பாராட்டு

6 months ago 17

சென்னை: இரவு வாகன சோதனையின்போது தங்களை தாக்கி விட்டு தப்பிய வழிப்பறி கொள்ளையர்கள் இருவரை போலீஸார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். பணியின்போது விழிப்புடன் செயல்பட்ட போலீஸாரை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுத்து நிறுத்த போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.அதன்படி, பரங்கிமலை போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தலைமைக் காவலர்கள் பிரகாஷ், பிரவீன்குமார் மற்றும் முதல் நிலைக்காவலர் சதீஷ்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ஆலந்தூர் ஜிம்கோ கம்பெனி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

Read Entire Article