
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று இரவு 7 மணிவரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இரவு 7 மணிவரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி,
திருப்பத்தூர், வேலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர், மதுரை, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.