இரண்டு விஷயங்களை வைத்துதான் கதாநாயகிகளை தேர்வு செய்வோம்- இயக்குனர் ஆர்.கே.செல்வமணி

4 hours ago 2

சென்னை,

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் முகேன் ராவ். இவர் தற்போது டி.ஆர்.பாலா தயாரித்து இயக்கும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'ஜின்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் பவ்யா திரிகா கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் ராதாரவி, பாலசரவணன், இமான் அண்ணாச்சி, வினோதினி, வடிவுக்கரசி உள்பட பலர் நடித்துள்ளனர். விவேக், மெர்வின் ஆகியோர் இசை அமைத்துள்ளனர்.

உண்மைக் கதையை மையமாக கொண்டு திகில் படமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற மே 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:-

'ஜின்' படத்தின் டிரெய்லர் நன்றாக வந்திருக்கிறது. படத்திற்கு கதாநாயகிகளை தேர்வு செய்யும் போது முதலில் நாங்கள் பார்ப்பது அவர்களின் கண்கள். அடுத்தது சிரிப்பு. இந்த இரண்டும் அழகாக இருந்தது என்றால் பார்வையாளர்களை நன்றாக கவர வைக்கும். இந்த இரண்டுமே படத்தின் கதாநாயகியான பவ்யா திரிக்காவிடம் இருக்கிறது. நிச்சயமாக தென்னிந்திய திரை உலகில் பெரிய இடம் உங்களுக்கு இருக்கிறது. ஒரே ஒரு வேண்டுகோள். நீங்கள் வளர்ந்த பிறகு இதே மாதிரி நட்பாகவும், அன்பாகவும், பணிவாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Read Entire Article