
சென்னை,
''மல்லேஷம்'' மற்றும் ''8 ஏ.எம் மெட்ரோ'' படங்களை இயக்கிய ராஜ் ஆர் இயக்கி இருக்கும் கிரைம் படமான ''23'' கடந்த மே 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சராசரிக்கும் குறைவான விமர்சனங்களையே இப்படம் பெற்றது.
தேஜா மற்றும் தன்மாய் குஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரக்களில் நடித்த இந்த படம், நிஜ வாழ்க்கை துயரங்களையும் சாதி அடிப்படையிலான அநீதிகளையும் பிரதிபலிக்கும் துணிச்சலான முயற்சிக்காக கவனத்தை ஈர்த்தது.
இந்த திரைப்படம் இன்று அமேசான் பிரைம் மற்றும் இடிவி வின் ஆகிய 2 ஓடிடி தளங்களின் வெளியாகி இருக்கிறது. ஸ்டுடியோ 99 தயாரித்த இந்த படத்தில் பிரபல குணச்சித்திர நடிகர்களான ஜான்சி, பாவோன் ரமேஷ், தாகுபோத்து ரமேஷ் மற்றும் பிரணீத் ஆகியோரும் நடித்துள்ளனர்.