இரண்டாவது மனைவியின் 2 மகள்களை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு எச்ஐவி: தெலங்கானாவில் அதிர்ச்சி

1 month ago 8

திருமலை: தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை ஒரு பகுதியை சேர்ந்தவர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி இறந்த பிறகு கடந்த 2018ம் ஆண்டு முதல் கணவனை இழந்த வேறோரு பெண்ணை 2வதாக திருமணம் செய்து வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு 19 மற்றும் 15 வயதில் 2 மகள்கள் உள்ளனர். அவர்களும் தங்கள் தாயுடன் வசிக்கிறார்கள்.

இரண்டாவது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் மைனர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தார். சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு மருத்துவ பரிசோதனையில் எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை அறிந்ததும் சிறுமிகள் கவலையடைந்து தங்கள் தாயிடம் தெரிவித்தனர். இதனையடுத்து ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.

The post இரண்டாவது மனைவியின் 2 மகள்களை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு எச்ஐவி: தெலங்கானாவில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article