
சென்னை,
'மெட்டி ஒலி' தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் போஸ் வெங்கட். சின்னத்திரை தாண்டி பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கோ, சிவாஜி, தலைநகரம், கவண், தாம்தூம், சிங்கம், ராஜாதி ராஜா உள்ளிட்ட ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். 'கன்னிமாடம்' , 'சார்' படங்களை இயக்கியுள்ளார்.
போஸ் வெங்கட்டின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகாவில் உள்ள பாண்டிபத்திரம் என்ற கிராமம் . கடந்த ஆண்டு நடிகர் போஸ் வெங்கட்டின் அக்காள்-அண்ணன் ஒரே நாளில் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.
போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் சார் திரைப்படம் இன்று வெளியானது. திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கல்வியின் அவசியத்தையும் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை இப்படம் பேசியுள்ளது.
இந்நிலையில் ஒரு துயரமான நிகழ்வு நடைப்பெற்றுள்ளது. நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட்டின் தாயார் ராஜாமணி இன்று மாலை 5 மணியளவில் காலமானார். இவருக்கு வயது 83. இவரது இறுதி சடங்கு நாளை மாலை சொந்த ஊரான அறந்தாங்கியில் நடக்கிறது.
நடிகர் போஸ் வெங்கட்டின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.