இப்படி... பத்த வச்சிட்டியே பெருசு அமித்ஷா உருவ பொம்மைக்கு வைத்த தீயில் சிக்கிய சிறுத்தைகள்..! வர்ரது எக்ஸ்பிரஸ் ரெயிலாம்.. நிறுத்த முடியாதாம்..

4 weeks ago 7
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ராணிப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் வைக்கோல் பொம்மை மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டிருக்கும் போதே , தீ பற்ற வைத்த விசிக பிரமுகரின் முகம் கருகியது சிலரது ஆடையில் தீப்பற்றியதால் அலறியடித்து ஓடி தீயை அணைத்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ராணிப்பேட்டையில் உள்த்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் உருவ பொம்ம்மையை எரிக்க தயாராகினர். உருவ பொம்மையில் தீயை பற்ற வைக்க சீனியர் சிறுத்தை ஒருவர் முயன்றார் ஆனால் தீப்பிடிக்கவில்லை..! இப்படி பத்த வச்சா எப்படி எரியும் ? என்று ஆவேசமான மற்றொரு சிறுத்தை வாட்டர் பாட்டிலில் பிடித்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றினார் கையில் வைத்திருந்த கொடியை கழுத்தால் அணைத்து பிடித்தபடியே , சீனியர் சிறுத்தை தீயை பற்ற வைக்க குப்பென பற்றிய தீயில் சீனியர் சிறுத்தை முகம் கருகி ஓடியது பெட்ரோலை ஊற்றியவரின் பாட்டிலிலும் தீபற்றியதால் அவர் பாட்டிலை உதற அது அருகில் நின்றிருந்த ஒருவரது பேண்டிலும், பெண் சிறுத்தையின் சேலையில் பட்டு தீபற்றி எரிந்தது சிதறி ஓடியவர்கள் உஷாராகி உடனடியாக தங்கள் ஆடைகளில் பற்றிய தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதே போல காஞ்சிபுரத்தில் நடந்த போராட்டத்திலும் தீ வைக்கப்பட்ட உருவ பொம்மையை ஏறி மிதித்த ஒருவரது பேண்டில் தீப்பற்றிக் கொண்டது போலீசார் உருவமொம்மையில் எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். நாகப்பட்டினத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகைக்காக சாலையின் குறுக்கே ரெயில்வே கேட் போடப்பட்டிருந்த நிலையில் ரெயிலை மறிக்க போவதாக வந்த சிறுத்தைகள் , போலீசாரின் தடையை மீறி தண்டவாளத்தில் நின்று கோஷமிட்டனர் ரெயிலை நிறுத்தச்சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் தெரிவிக்க, வருவது எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்த முடியாது என்று சொன்ன போலீசார் தண்டவாளத்தை விட்டு நகர்ந்து செல்ல அறிவுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள், “அமித்ஷாவே நாட்டை விட்டு வெளியேறு” என்று கோஷமிட்டபடியே தண்டவாளத்தை விட்டு வெளியேறினார் இந்த விவரம் அறியா போர்க்குணம் கொண்ட சிறுத்தை ஒருவர், வாங்க ரெயில் தண்டவாளத்துக்குள் செல்லலாம் என்று அழைக்க, அவரிடம் ரெயில் வரும் தகவலை சைகையில் கூறியதும், அவரும் கோஷமிட்டபடியே வெளியே வந்தார் விசிகவினர் அங்கிருந்து சென்ற சில நொடிகளில் வழக்கத்தை விட அதிவேகமாக எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த இடத்தை கடந்து சென்றது  
Read Entire Article