
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவன் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டுள்ளார். தொடர்ந்து காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி அவ்வப்போது நேரில் வந்து சந்தித்துள்ளார்.
மேலும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி உடல் சோர்வாக காணப்பட்டதால், பெற்றோர் அவரை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக டாக்டர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வந்தவாசி மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அச்சரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.