இன்றைய ராசிபலன் - 30.10.2024

2 months ago 14

இன்றைய பஞ்சாங்கம்:-

குரோதி வருடம் ஐப்பசி மாதம் 13-ம் தேதி புதன்கிழமை

நட்சத்திரம்: இன்று இரவு 11.22 வரை அஸ்தம் பின்பு சித்திரை

திதி: இன்று பிற்பகல் 2.21 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி

யோகம்: மரண, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 9.15 - 10.15

ராகு காலம் மாலை: 12.00 - 1.30

எமகண்டம் காலை: 7.30 - 9.00

குளிகை காலை:10.30 - 12.00

கௌரி நல்ல நேரம் காலை:10.45 - 11.45

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டம்: அவிட்டம், சதயம்

ராசிபலன்:-

மேஷம்

அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள். தேகம் பொலிவு பெறும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

ரிஷபம்

இரும்பு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். உடல் உற்சாகத்துடன் காணப்படும். வேலை தேடுபவர்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நினைத்த உத்யோகம் கிடைக்கும். அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கடகம்

பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது வாய் நிதானம் தேவை. விவசாயிகளுக்கு கேட்ட கடன் தொகை கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். திருமண பேச்சு வார்த்தை சுபமாக முடியும். வெளியூர் பயணம் தள்ளிப் போகும். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

சிம்மம்

வாகனம் ஓட்டும் போது வாகனத்தின் முக்கிய ஆவணங்களை வைத்துக் கொள்வது நல்லது. அரசு சம்பந்தப்பட்ட டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். பணவரவு அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கன்னி

வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்

பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கே சென்று அவர்களை உங்கள் வழியில் வரவழையுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

விருச்சிகம்

தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உடல் நலம் சிறக்கும்.அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து நிதானமுடன் செயல்படவும். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

தனுசு

குல தெய்வ பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வங்கிக் கடன் உதவியும் கிட்டும். வேலை தேடுபர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். பயணங்கள் நன்மையில் முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மகரம்

அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசியலில் செல்வாக்கு உயரும். அலைச்சல் அதிகரிக்கும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

கும்பம்

வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும். பெரியவர்களின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். பெற்றோரின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை நீங்கும். பணவரவில் தாமதம் இல்லை. வீட்டில் நிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்வண்ணம்

மீனம்

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வேலைச்சுமை இருக்கும். திடீர் பணவரவு உண்டு. சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

 

Read Entire Article