
இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் பங்குனி 11ம் தேதி செவ்வாய்க்கிழமை
நட்சத்திரம்: இன்று அதிகாலை 12.57 வரை உத்திராடம் பின்பு திருவோணம்
திதி: இன்று அதிகாலை 1.22 வரை தசமி பின்பு ஏகாதசி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம் காலை: 8.15 to 9.00
நல்ல நேரம் மாலை: 4.30 to 5.30
ராகு காலம் மாலை: 3.00 to 4.30
எமகண்டம் காலை: 9.00 to 10.30
குளிகை மாலை: 12.00 to 1.30
கௌரி நல்ல நேரம் காலை: 10.30 to 11.30
கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 to 8.30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்
ராசிபலன்
மேஷம்
தொழிலில் பொறுமையுடனும் உறுதியுடனும் இருப்பது நல்லது. இனிமையான சம்பவம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் இருந்த சந்தேகம் விலகும். பெற்றோரின் நீண்ட நாள் பிரச்சினை விலகும். உடல் நலம் மேம்படும். வெளி நபர்களிடம் எச்சரிக்கைத் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
ரிஷபம்
பிரிந்திருந்த காதலர்கள் ஒன்று சேருவர். தங்கள் சேமிப்பு உயரும். ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள். சகோதரி இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வார். குடும்ப பொறுப்பினை உணர்ந்து நடப்பீர். உடல் பொலிவும் சுறுசுறுப்பும் மிகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மிதுனம்
இன்று திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழ்ப்பங்கள் வந்து போகும். ஆதலால், இறைவனை மட்டும் இன்று பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால், தியானம் செய்யவும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கடகம்
உத்யோகஸ்தர்களுக்கு கடன் பைசலாகும். நண்பர்கள் விசயத்தில் விட்டுக் கொடுங்கள். குடும்பத்தில் வாக்குவாதம் வேண்டாம். மனம் அமைதியைத் தேடும். உடன்பிறப்புகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
சிம்மம்
மாணவர்களின் தேவை பூர்த்தியாகும். எதிர்காலத்திற்கென சேமிக்க துவங்குவீர்கள். ரியல் எஸ்டேட் பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் கொள்வர். புதிய சொத்து வாங்குவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த வழி பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
கன்னி
மூத்த சகோதரரால் நன்மை விளையும். மனதில் மகிழ்ச்சி நிலவும்.வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். கலைஞர்கள் பாராட்டினை பெறுவர். தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். மாணவர்கள் கூடா நட்பை விலக்குவர். மருத்துவர்கள் சாதனைப் படைப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: கிளிபச்சை
துலாம்
கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். வெகு நாட்களாக குழந்தை இல்லாதோர்க்கு பிள்ளை போகம் உண்டாகும். புகழ் பெற்ற பகுதிக்கு உங்களுடைய கடையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
விருச்சிகம்
தொலை தூர புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். வாகனத்தை மாற்றுவீர்கள். பங்குச் சந்தை மூலம் பணம் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
தனுசு
பந்தங்கள் வீடு தேடி வந்து அன்பு பாராட்டுவர். கோயில் விழாக்களில் கலந்து கொள்வீர்கள். எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த பகைமை நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த ஒற்றைத் தலைவலி நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மகரம்
உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தேக பலம் உண்டாகும். கணவன்- மனைவிக்குள் இருந்த சந்தேகம் விலகி வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கும்பம்
மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். வழக்கு சாதகமாகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
மீனம்
உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பங்கு சந்தையால் அனுகூலம் உண்டு. மாணவர்கள் விடுமுறையிலும் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை