இன்றைய ராசிபலன் - 24.04.2025

4 hours ago 3

இன்றைய பஞ்சாங்கம்

ஏப்ரல்: 24

கிழமை: வியாழக்கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்; சித்திரை

நாள்; 24

ஆங்கில தேதி;11

ஆங்கில மாதம்;ஏப்ரல்

வருடம்;2025

நட்சத்திரம்; இன்று காலை 06-50 வரை சதயம் பின்பு பூரட்டாதி

திதி; இன்று காலை 10-26 வரை ஏகாதசி பின்பு துவாதசி

யோகம்; மரண,சித்த யோகம்

நல்ல நேரம் காலை; 10-30 முதல் 11-30

ராகு காலம் பிற்பகல்; ;1-30 முதல் 3-00

எமகண்டம் காலை ; 6-00 முதல் 7-30

குளிகை காலை ; 9-00 முதல் 10-30

கௌரி நல்ல நேரம் காலை ; 12-30 முதல் 1-30

கௌரி நல்ல நேரம் மாலை 6-30 முதல் 7-30

சூலம்;தெற்கு

சந்திராஷ்டமம்; மகம்

ராசிபலன்

மேஷம்

வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் மக்களிடம் பேராதரவை பெறுவர். வீட்டு பிராணிகளை வளர்க்க ஆர்வம் கொள்வீர். பெண்கள் தங்கள் குடும்ப விசயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. உடல் நிலை மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம் ஊதா

ரிஷபம்

வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். தங்கள் காதலை வெளிப்படுத்த ஏற்ற காலம். மணமாகாதவர்களுக்கு எதிர்பார்த்தவாரே துணை தேடி வரும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

மிதுனம்

தம்பதிகளிடத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். உத்யோகத்தில் வேலை பளு அதிகம் இருக்கும். கலைஞர்கள் தங்கள் படங்களில் வெற்றி காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

கடகம்

தொழில் அதிபர்கள் தம்பதிகள் தங்கள் வருவாயினை பெருக்க திட்டமிடுவர். இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். அப்படி அத்தியாவசியமானால், இரு சக்கர வாகனத்தை விட நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்பது நல்லது. நொறுக்கு தீணிகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

சிம்மம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

கன்னி

வாகனம் ஓட்டும் போது கவனமுடன் இருப்பது நல்லது. எதிரிகள் விலகிப் போவர். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவர். உத்யோகத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். பெண்களுக்கு வேலை பளு அதிகம் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

துலாம்

வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு நன்மதிப்பெண்கள் எடுப்பர். அவர்களால் ஆறுதலடைவீர்கள். தேக ஆரோக்கியம் நன்கு இருக்கும்.

விருச்சிகம்

அதிக விற்பனைக்காக வியாபாரத்தை துவங்க புது கிளையை புது இடத்திற்கு கடையை துவங்குவீர்கள். பணப் பிரச்சினை இருக்காது. பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். முகத் தோற்றம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

தனுசு

சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். பெண்களுக்கு நல்ல வரண் கிட்டும். சுபகாரியத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க திட்டமிடுவீர்கள். தங்களுடைய அறிவை மற்ற இடங்களிலும் பரப்ப வேற்று மொழியினைக் கற்க துவங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

மகரம்

குடும்பத்தில் உள்ள சொத்து சிக்கல்களும் சுமூகமாக முடியும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். குடும்பத் தலைவிகளின் தேவை நிறைவேறும். புதிய நண்பர்கள் கிடைப்பர்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

கும்பம்

பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் சில புதிய வகையான மாற்றம் செய்வீர்கள். கூட்டு சில சமயம் முன்கோபம் வந்து போகும். உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பணப்பிரச்சினை நீங்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும்.

அதிர்ஷ்ட நிறம் ரோஸ்

மீனம்

தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். நட்பால் ஆதாயம் உண்டு. புதிய வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். இரு சக்கர வாகனம் ஓட்டும் போது வேகத்தை குறைப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்கும். அத்தியாவசிய தேவையா என உணர்ந்து செலவினை மேற்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை


Read Entire Article