இன்றைய ராசிபலன் - 03.02.2025

1 week ago 6

இன்றைய பஞ்சாங்கம்:-

குரோதி வருடம் தை மாதம் 21-ம் தேதி திங்கள் கிழமை

நட்சத்திரம் இன்று அதிகாலை 4-07 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி

திதி : இன்று காலை 10-12 வரை பஞ்சமி பின்பு சஷ்டி

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 6-30 to 7-30

நல்ல நேரம் மாலை : 5-00 to 6-00

ராகு காலம் காலை : 07-30 to 09-00

எமகண்டம் காலை : 10-30 to 12-00

குளிகை மாலை : 1-30 to 3-00

கௌரி நல்ல நேரம் காலை : 09-30 to 10-30

கௌரி நல்ல நேரம் மாலை : 7-30 to 8-30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : பூரம்,உத்திரம்

ராசிபலன்:-

மேஷம்

வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். உங்கள் வீட்டில் பணிபுரிபவர்கள் உண்மையாக இருப்பர். அவர்கள் தேவையை பூர்த்தி செய்வீர்கள். புதிய வாகனம் வாங்க திட்டுமிடுவீர்கள். பழைய வீட்டை சீர் செய்வீர்கள். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

ரிஷபம்

பணவரவு சற்று தாமதப்பட்டாலும் சம்பளம் வந்து சேரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாகவே நிகழும். பெண்கள் செலவினை சமாளிப்பர். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரம் செழிப்புறும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை கூடும். கணவன் மனைவி ஒற்றுமை காப்பர். தேகம் பலம்பெறும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மிதுனம்

வேற்றுமதத்தவர் உதவுவார். செலவு கூடும். சிக்கனம் தேவை. புதுநபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். உத்யோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உண்மையாக இருப்பர். அவர்கள் தங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கடகம்

பணம் பாக்கெட்டை நிரப்பும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். தேகம் மின்னும். உறவினர்கள் வருகை உண்டு. அவர்களால் நன்மை உண்டு. கூட்டு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தம்பதிகளின் அன்பு மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

சிம்மம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளது தான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கன்னி

குல தெய்வ கோவில் செல்வீர்கள். சொத்து ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்கள் சாதனைபுரிவர். தங்களுக்கு பிடித்த கல்லூரி மற்றும் பள்ளியில் மாற்றம் செய்ய பெற்றோர்கள் சம்மதிப்பர். நீண்ட நாட்களாக தங்கள் பெற்றோர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர்களுக்கு உடல் நலம் சீராகும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

துலாம்

புதிய திட்டங்களை மனதிற்குள் அசைபோடுவீர்கள். தம்பதிகளிடையே மனஸ்தாபம் விலகும். உத்யோகம் சாதகமாக செல்லும். இன்று குடும்பத்துடன் ஷாப்பிங் மாலுக்கு சென்று வருதல், திரைப்படம் பார்த்தல் போன்றவைகளில் நேரத்தை செலவழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

விருச்சிகம்

வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சலுகை கிடைக்கும். தொலைந்து போன பொருள் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். தம்பதிகளிடையே இணக்கம் அதிகரிக்கும். தங்கள் விடாமுயற்சியால் முக்கியமான ஒன்றை முடித்துக் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

தனுசு

பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மனம் விட்டு பேசுவீர்கள். தேகம் புதுப்பொலிவுடன் காணப்படும். கடன் தொல்லை தீரும். தம்பதிகள் விட்டுக்கொடுப்பர். பிள்ளைகளின் மேல் கவனம் தேவை. பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும். வீட்டில் மகிழ்ச்சித் தங்கும். மாணவர்களின் நினைவாற்றல் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மகரம்

எண்ணெய் வியாபாரம் லாபம் தரும். கொடுக்கல் வாங்கல் சீராகச் செல்லும். குடும்பப் பிரச்சினை தீரும். தம்பதிகளின் அன்பு பலப்படும். எடுக்கும் காரியங்கள் வெற்றி தரும். நண்பர்கள் விட்டுக் கொடுப்பார்கள். அவர்களாகவே தங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்பர்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கும்பம்

பட விநியோகஸ்தர்கள் கிடைப்பர். விரைவில் தங்கள் படம் வெளியாகும். உத்யோகஸ்தர்கள் தங்கள் அலுவலகத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் மிகும். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

மீனம்

உறவினர்களை பார்த்து மகிழ்வீர்கள். உடல் நலம் சிறக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். பயணங்கள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் கோபம் வேண்டாம். பிரபலங்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். அவர்களால் நன்மைகள் உண்டு. திடீர் வெளியூர் பயணம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

Read Entire Article