காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிகளில் இன்று முதல் வரும் 24ம் தேதி வரை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மூன்றாம் கட்டமாக 4 நாட்கள் முகாம்கள் நடத்தி பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 10 முகாம்களும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 10 முகாம்கள் என மொத்தம் 20 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, பின்வரும் கிராமங்களில் 21ம்தேதி முதல் 24ம்தேதி வரை நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி உரிய ஆவணங்களுடன் மனு அளித்து பயன் அடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த முகாம்கள் நடைபெறும் கிராமங்களின் விவரம் வருமாறு: வாலாஜாபாத் வட்டத்தில் ஆசூர் அரசு ஆரம்பப்பள்ளி (ஆதிதிராவிடர் நலம்), ஆசூர் ஊராட்சி ஆற்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, மாகறல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உத்திரமேரூர் வட்டத்தில் அரும்புலியூர் கரும்பாக்கம் சமுதாய கூடம், பெருநகர் பி.எஸ்.எம்.கே திருமண மண்டபம் பெருநகர் ஊராட்சியில் நடைபெறும்.
வரும் 22ம்தேதி வாலாஜாபாத் வட்டம் பழையசீவரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரிய காலனி ஊத்துக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அருகில்) வாரணவாசி – ஆதிதிராவிடர் நலப்பள்ளி, தாழம்பட்டு தென்னேரி – கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம் (ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அருகில்), கட்டவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், 23ம்தேதி குன்றத்தூர் வட்டம், சிறுகளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காலடிபேட்டை மலையம்பாக்கம் – ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மலையம்பாக்கம் வடக்கு காலனி, நந்தம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரியார் நகர் படப்பை சி.என்.சி உறால் படப்பை, பூந்தண்டலம் புதுநல்லூர் சமுதாய கூடத்திலும் நடக்கிறது.
இதையடுத்து, 24ம்தேதி குன்றத்தூர் வட்டத்தில் நடுவீரப்பட்டு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப்பள்ளி, நடுவீரப்பட்டு ஊராட்சி திருமுடிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருமுடிவாக்கம் காலனி சிக்கராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சிக்கராயபுரம் பழந்தண்டலம் அரசு மேல்நிலைப்பள்ளி, அண்ணா காலனி கொல்லச்சேரி காவேரி திருமண மண்டபம் ஆகிய கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post இன்று முதல் வரும் 24ம் தேதி வரை உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: மொத்தம் 20 இடங்களில் நடக்கிறது, வட்டம் வாரியாக மனு அளிக்கலாம் appeared first on Dinakaran.