இன்று நடந்த மொழிப்பாடத் தேர்வை 8,02,567 மாணவர்கள் எழுதினர்

6 hours ago 2

சென்னை,

பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுத இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு மார்ச் 25ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக தமிழகம் புதுச்சேரியில் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வின் முதல் தேர்வான மொழிப் பாடத்தை 8,02,567 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர் என்றும் 11,430 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Read Entire Article