இன்று தொடங்கும் கனமழை வரும்16-ம் தேதி வரை நீடிக்கும் - இந்திய வானிலை மையம்

1 month ago 7

புதுடெல்லி,

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக இன்று முதல் வடகிழக்கு பருவமழையின் 4-வது சுற்று மழைப்பொழிவு தீவிரம் அடைய இருக்கிறது. இதில் இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) டெல்டா மாவட்டங்களில் பரவலாக அனேக இடங்களில் கன முதல் மிக கனமழையும், சில இடங்களில் அதி கனமழையும், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மிக கனமழை வரையிலும் பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வைப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று தொடங்கும் கனமழை டிசம்பர் 16-ம் தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு - இலங்கை நோக்கி வரக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

Read Entire Article