இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

10 hours ago 5

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், அதை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான தி.மு.க. முன்கூட்டியே தயாராகிவருகிறது. அதன் ஒருபகுதியாக, கடந்த 1-ந் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 7-ந் தேதி (இன்று ) தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள், தொகுதிப் பார்வையாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

காணொலிக்காட்சி வழியாக காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நிர்வாகிகள் மத்தியில் பேச இருக்கிறார். அப்போது, சட்டமன்ற தேர்தலுக்கான முன்னெடுப்புகள் குறித்து ஆலோசனை வழங்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் 7-6-2025 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறும்.

அதில், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article