பெங்களூரு: பெங்களூருவில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி நடத்தப்படுகிறது. இதை காண இந்தியா மட்டுமில்லாமல், உலகின் பல நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள். அதன்படி இன்று தொடங்கி வரும் 14ம் தேதி வரை 5 நாட்கள் 15வது சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரு எலங்காவில் உள்ள விமானப்படை பயிற்சி மைதானத்தில் நடைபெறுகிறது.
கண்காட்சியை ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைக்கிறார். துவக்க விழாவில் முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் உள்பட ஒன்றிய, மாநில அமைச்சர்கள், பல நாடுகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், தேசிய மற்றும் சர்வதேச தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
இதனிடையே சர்வதேச விமான கண்காட்சியில் 809 முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கண்காட்சி அரங்குகள் இடம் பெறுகிறது. நமது நாட்டின் சூரியகிரண் உள்பட 53 விமானங்கள் சாகசங்களில் ஈடுபடுகிறது. 27 நாடுகளில் இருந்து பார்வையாளர்கள், சுமார் 200க்கும் மேற்பட்ட விமான தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கிறது. கண்காட்சியில் ₹75 ஆயிரம் கோடி வரை புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
The post இன்று சர்வதேச விமான கண்காட்சி தொடக்கம்: பெங்களூருவில் 5 நாள் நடக்கிறது appeared first on Dinakaran.