இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்: "வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு தயாராகுங்கள்.." - டிரம்ப்

1 week ago 3

பென்சில்வேனியா,

உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். தற்போதைய ஜனாதிபதியாக ஜோ பைடன் உள்ளார். அவரது பதவி காலம் வருகிற 2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டன. அந்த நாட்டு சட்டப்படி நவம்பர் மாதம் பிறந்து முதல் செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் நடைபெறும்.

ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் தானே போட்டியிடுவதாக அறிவித்தார். அதேபோல குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் களம் இறங்கினார். வயோதிகம் காரணமாக போட்டியில் இருந்து விலகிய ஜனாதிபதி ஜோ பைடன். தனது கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று அறிவித்தார். அதன்படி அவரும் களத்தில் குதித்தார்.

அமெரிக்க மக்கள் தங்கள் ஜனாதிபதியை நேரடியாக தேர்ந்து எடுப்பதில்லை. மாகாணங்களில் மக்கள் அளிக்கும் ஓட்டுகள் கணக்கிடப்பட்டு தேர்வுக்குழு உறுப்பினர்கள் வாயிலாக (எலெக்ட்ரோல் காலேஜ்) ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார்.

இந்த எலெக்ட்ரோல் காலேஜ் ஓட்டுகள் ஒவ்வொரு மக்கள் தொகை அடிப்படையில் மாகாணத்துக்கு மாகாணம் வேறுபடும். அந்தவகையில் மக்கள் தொகை அதிகம் உள்ள கலிபோர்னியாவில் 54 எலெக்ட்ரோல் காலேஜ் ஓட்டுகளும், குறைந்த மக்கள் தொகை உள்ள வியாமிங் மாகாணத்தில் 3 ஓட்டுகளும் உள்ளன.

மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 பேரின் ஆதரவை பெறுபவர்களே ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவார்கள். மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 48 மாகாணங்களில் அதிக ஓட்டு பெறுபவர்களுக்கு, அனைத்து எலெக்ட்ரோல் ஓட்டுகளும் கிடைத்துவிடும். அவரே வெற்றி பெற்றவராவார். மைன், நெப்ரஸ்கா மாகாணங்களில் மட்டுமே 2-ம் இடம் பெறுபவர்களுக்கு விகிதாசார முறைப்படி ஓட்டு கள் பகிர்ந்து வழங்கப்படும்.

இந்த தேர்தலில் 16 கோடியே 50 லட்சம் பேர் தகுதி படைத்த வாக்காளர்களாக உள்ளனர். அமெரிக்க சட்டப்படி தேர்தலில் முன்கூட்டியே வாக்குகளை செலுத்த முடியும். அதன்படி இ-மெயில் மற்றும் தபால் மூலம் 7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர்.

தேர்தல் களத்தில் கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் போட்டி இருந்தது. கருத்து கணிப்புகளில் இருவரும் சமபலத்திலேயே இருந்து வந்தனர். 50 மாகாணங்களில் வெற்றியை நிர்ணயிக்கும் மாகாணங்களாக அரிசோனா, ஜார்ஜியா, மிக்சிகன், நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை உள்ளன. இதில் மிக்சிகன், விஸ்கான்சின் ஆகிய 2 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருக்கிறார். மற்றவற்றில் டிரம்பே முன்னிலையில் இருக்கிறார்.

இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலுக்காக வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ், இ- மெயில் மூலம் நேற்று தனது வாக்கை செலுத்தினார். வாக்குப்பதிவு முடிந்தவுடன், உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கிவிடும். இழுபறி எதுவும் இல்லை என்றால், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது உடனடியாக தெரியவரும். அதிகாரப்பூர்வமான முடிவுகள் நாளை (புதன்கிழமை) தெரிந்துவிடும்.

இதனிடையே அதிபர் தேர்தல் தினத்தை முன்னிட்டு, பென்சில்வேனியாவில் நடந்த பேரணியி பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், "எனது தலைமையின் கீழ், இந்த பொருளாதார கனவை விரைவில் பொருளாதார அதிசயமாக மாற்றப் போகிறோம். அமெரிக்காவை மீண்டும் பணக்காரர்களாக்குவோம், அதற்கு நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும்! நான்கு ஆண்டுகள், நாம் அனைவரும் இதற்காகக் காத்திருந்தோம். நாளை, உங்களைப் போன்ற கடின உழைப்பாளி தேசபக்தர்கள்தான் நம் நாட்டைக் காப்பாற்றப் போகிறார்கள்.

கமலாவின் நான்கு வருடங்கள் அமெரிக்க தொழிலாளர்களுக்கு பொருளாதார நரகத்தைத் தவிர வேறெதையும் வழங்கவில்லை. அவரது பணவீக்கப் பேரழிவு வாழ்க்கையை கட்டுப்பாடற்றதாக ஆக்கியுள்ளது. இதனால் குடும்பங்களுக்கு 30,000 டாலர்களுக்கு மேல் விலை உயர்ந்துள்ளது. அதை உடைத்து நான் சரி செய்கிறேன்" என்று அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. கடைசி கட்ட கருத்துக்கணிப்புபடி முக்கிய 7 மாகாணங்களில் தனக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்று டிரம்ப் நம்புகிறார். எனவே வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு தயாராகுங்கள் என்று குடியரசு கட்சியினருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Read Entire Article