இன்று ‘அனல் பறக்கும்’ அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறும் காளைகளை அடக்க தயாராகும் வீரர்கள்

2 weeks ago 3

பொங்கல் விழாவையொட்டி மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை கோலாகலமாக நடக்கிறது. இதில் சிறந்த மாடுபிடி வீரர், பிடிபடாத காளைக்கு கார், டிராக்டர் பரிசு வழங்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் கிராமங்களில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.14) நடக்கிறது. இந்த போட்டிக்கு 2,026 காளைகள், 1,735 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இவர்களில் போட்டிகளில் பங்கேற்க உள்ள சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு நேற்று ‘டோக்கன்கள்’ வழங்கப்பட்டது.

Read Entire Article