'இன்னும் 50 நாட்கள்' - வைரலாகும் 'புஷ்பா 2' திரைப்படத்தின் போஸ்டர்

3 months ago 22

சென்னை,

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ் . இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களில் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. இப்படம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பில் சில தாமதங்கள் ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

பின்னர், 'புஷ்பா 2 தி ரூல்' படம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்தனர். அதன்படி, இப்படம் வெளியாக இன்னும் சரியாக 50 நாட்கள் உள்ளன. இதனையடுத்து, படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 'இன்னும் 50 நாட்கள்' என்று பதிவிட்டும் உள்ளனர். இதனையடுத்து இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

PUSHPA RAJ BLOCKBUSTER RULE Begins in 50 DAYS! In cinemas from Dec 6th, 2024.#50DaysToPushpa2Storm #Pushpa2TheRule ❤️ pic.twitter.com/ApAACw36VV

— Pushpa (@PushpaMovie) October 17, 2024
Read Entire Article