
தர்மசாலா,
இந்தியாவின் அண்டை நாடு தீபெத். இந்நாடு 1959ம் ஆண்டு முதல் சீனாவின் கடுப்பாட்டில் உள்ளது. அந்நாட்டை சேர்ந்த புத்த மத தலைவர் தலாய் லாமா சிறுவயதிலேயே இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்தார். அவருடன் புத்த மதத்தை சேர்ந்த லட்சக்கணக்கான திபெத் மக்கள் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். இவர்கள் இமாச்சலபிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
இதனிடையே, புத்தமத தலைவரான தலாய் லாமா நாளை தனது 90வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இமாச்சலபிரதேசத்தின் மேக்லியாட் கஞ்ச் பகுதியில் உள்ள புத்தமத வழிபாட்டு தலத்தில் இன்று தலாய் லாமா நீண்ட நாட்கள் வாழ வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் தலாய் லாமா கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய தலாய் லாமா, எதிர்காலத்தில் இவையெல்லாம் நடக்கக்கூடும் எனக்கூறும் பல வாசகங்களை பார்க்கும்போது நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். என்னால் முடிந்த நல்லதை நான் செய்துள்ளேன். இன்னும் 30 அல்லது 40 ஆண்டுகளுக்குமேல் வாழ ஆசைப்படுகிறேன். உங்கள் பிரார்த்தனைகள் இதுவரை பலனளித்துள்ளன. நமது நாட்டை நாம் இழந்தபோதும், நாம் இந்தியாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறோம். தர்மசாலாவில் வாழும் மக்களுக்கு நான் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்' என்றார்